பைக் மோதி துப்புரவு பணியாளர் பலி

கீரனூர் விராலிமலை சாலையில் பழனிக்கு பாத யாத்திரை சென்ற துப்புரவு பணியாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2023-12-28 07:57 GMT

காவல் நிலையம் 

விராலிமலை ஒன்றியம் பாலண்டம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் 55., துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். நடராஜன் உள்பட ஏராளமானோர் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். இரவு 9 மணி அளவில் கீரனூர் விராலிமலை சாலையில் உள்ள காரப்பட்டு அருகே சென்றபோது கீரனூரில் உள்ள காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் செல்லப்பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நடராஜன், செல்லப்பாண்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். திருச்சி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்லப்பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மண்டையூர் போலீஸ் சார்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News