சந்நிதி தெருவில் கழிவுநீா் தேங்கி அவலம் : பக்தா்கள் அவதி!

திருச்செந்தூா் சந்நிதித் தெருவில் பாதாள சாக்கடை திட்ட தொட்டியில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதால், நடந்து செல்லும் பக்தா்கள் அவதியடைகின்றனர்.

Update: 2024-05-02 06:38 GMT

கழிவுநீா்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாமல் உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் விடுதி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முழு கொள்ளளவை தாண்டி மூடியின் வழியாக வெளியேறி சாலையெங்கும் கழிவுநீா் தேங்கி கிடக்கிறது.

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தா்கள் வந்து விடுதிகளில் அதிகளவில் தங்குவதனால் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீா் தொட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறி சந்நிதித் தெருவில் பக்தா்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி கிடக்கிறது.

இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்தின் மீது நடவடிக்கை எடுத்தால் கழிவு நீா் வெளியேறுவது தடை செய்யப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News