சரஸ்வதி பூஜை விழா - இரணியலில் குழந்தைகள் மாறுவேடப் போட்டி
திங்கள் சந்தை அருகே இரணியலில் சரஸ்வதி பூஜை திருவிழாவையொட்டி குழந்தைகள் மாறுவேட போட்டி நடைபெற்றது;
Update: 2023-10-23 06:59 GMT
குழந்தைகள் மாறுவேட போட்டி
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் சரஸ்வதி பூஜை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. மேலத்தெரு, கீழத்தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு , பட்டாரியர் தெரு கோயில் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை விஜயதசமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் இரணியல் மேலத்தெரு ஶ்ரீ சித்தி விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி பாடல் போட்டி வினாடி வினா நீச்சல் போட்டி மாறுவேடம் போட்டி நடைபெற்றது. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இரணியல் பேரூராட்சி தலைவர் ஸ்ரீகலா முருகன், ஊர் தலைவர் பாஸ்கர், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார், அஜந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.