சரஸ்வதி பூஜை: ஆட்டோ டிரைவர்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜையையொட்டி ஆட்டோக்களை அலங்கரித்து பூஜைகள் செய்து சரஸ்வதி பூஜையை ஆட்டோ சங்கத்தினர் கொண்டாடினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-23 10:51 GMT
சரஸ்வதி பூஜை
தூத்துக்குடி ஜின்பேக்டரி சாலையில் உள்ள டாக்டர்.கலைஞர் ஆட்டோ ஸ்டேண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளை கொண்டாடும் விதமாக தங்களது ஆட்டோக்களை சுத்தம் செய்து அலங்கரித்து சிறிய வகையான வாழை தோரனை கட்டி ஆட்டோகளுக்கு மாலை அணிவித்து ஆட்டோவை கண்கவர செய்ரு வைத்திருந்தனர். மேலும் ஆட்டோ சங்கத்தினர் சக்கரை பொங்கல், சுண்டல், இனிப்பு வகைகள்,பழங்கங்கள் ஆகியவைகளை படைத்து சரஸ்வதி தேவி போட்டோ முன்பாக தங்களது ஆட்டோ சாவிகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஆட்டோ ஓட்டுனர்களின் இந்த சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பூஜைகள் செய்து வைக்கப்பட்ட ஆட்டோக்களின் சாவிகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.