அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டி கோவிலில் வழிபாடு
அதிமுகவை ஒருங்கிணைத்து பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.;
வழிபாடு மேற்கொண்ட சசிகலா ஆதரவாளர்கள்
அனைத்திந்திய அண்ணா திமுகவை ஒருங்கிணைந்து பொதுச்செயலாளராக சசிகலா தலைமையில் பதவி ஏற்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பொன் த மனோகரன் தலைமையில் தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கதிராமங்கலம் அருள்மிகு வனதுர்க்கை அம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு அபிஷே ஆராதனை செய்து அர்ச்சனை செய்து 108 அகல் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாட்டு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ்.ஒன்றிய கழக இணைச் செயலாளர் ஜி ரவிக்குமார்.ஒன்றிய கழக அவைத்தலைவர் அரங்கநாதன்.அணைக்கரை முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் முகமது மாலிக்.அசோகன். ஊராட்சி செயலாளர்கள் வானம்பாடி விமல் ராஜ். முள்ளங்குடி செந்தில்.கோட்டூர் ஸ்டாலின் கதிரை சத்தியசீலன்.கதிரை ராஜ்குமார் கீழ சூரிய மூலை அன்பழகன் ஆறலூர் ராமலிங்கம் மற்றும் ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்