பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா பணிகள் தீவிரம்
பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத அக்கினேஸ்வர சுவாமி திருக்கோவிலில் தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வர ஸ்வாமி அருள் பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு நடைபெறுகிறது .
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் சனீஸ்வர பரிகார ஹோமமும் ,சனிப்பெயர்ச்சி இலட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள், பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் கழிப்பிட வசதிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது.
விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.