விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-06 05:12 GMT

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி., உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீதரன் மேற்பார்வையில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீதரன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலத்தில் துவங்கி விழுப்புரம் சட்ட கல்லூரி வரை மாணவிகள் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

விழுப்புரம் எம்ஜிஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் 200, விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி மாணவிகள் 150, அன்னை தெரசா பாரா மெடிக்கல் மற்றும் கல்லூரியை சேர்ந்த 200 மாணவிகள், ஆர் ஜே மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி சேர்ந்த 200 மாணவிகள் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணியை அடுத்து சட்ட கல்லூரி கலையரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு, போக்ஸோ சட்டங்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, அவசர உதவி எண்கள், பெண்களுக்கான உதவி எண் 181, சைபர் புகார் உதவி எண் 1930, காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு காவல் உதவி செயலி பற்றிய செயல் முறை விளக்கங்கள் அளித்தும் 800 மாணவிகளுக்கு தரவிரக்கம் (Download) செய்து கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News