எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மானியத்துடன் நடமாடும் உணவகம் தொடங்க அழைப்பு

எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மானியத்துடன் நடமாடும் உணவகம் தொடங்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-10-27 03:04 GMT

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, நடமாடும் ஊர்தியில் உணவக தொழில் தொடங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 73 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தொழிலுக்கு திட்டத்தொகையாக 3.55 லட்சம் வழங்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற வழிவகை செய்யப்படும். www.tahdco.com http://www.tahdco.com என்ற இணையதள முகவரியில், உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோயில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News