போலி நகைகள் கொடுத்து நூதன மோசடி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் போலியான கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுப்பட்ட பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-01-10 02:13 GMT

போலி நகைகள் கொடுத்து மோசடி

மன்னார்குடி கீழப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் . இவர் மன்னார்குடி கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது நகை கடைக்கு இரண்டு பெண்கள் நகைகள் வாங்க வந்துள்ளனர் . இதையடுத்து தங்களிடம் எட்டு பவுன் பழைய நகைகள் இருப்பதாக கூறி அதை மாற்றி புதிய நகை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் . இதையடுத்து எட்டு பவுன் பழைய நகைகளை பெற்றுக் கொண்டு ஆறு பவுன் புதிய நகைகளை அந்த பெண்களிடம் குபேந்திரன் கொடுத்துள்ளார். நகைகளை பெற்றுக் கொண்டு அந்த பெண்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் கொடுத்த பழைய நகைகளை குபேந்திரன் சோதனை செய்துள்ளார். அப்போது அவைகள் போலியான கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது .இது குறித்து குபேந்திரன் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் தப்பி ஓடிய இரண்டு பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News