குடிநீர் தட்டுப்பாடு; பெண்கள் முற்றுகைப் போராட்டம்
சூளகிரி நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அப்பகுதி பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரில் உள்ள பேரிகை செல்லும் சாலையில் வாணியார் தெரு மற்றும் கோட்டை தெருவில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன... இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் 30 கற்கும் மேற்பட்ட குடியிருப்பு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சூளகிரியில் உள்ள பிடிஒ அலுவலக முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பின்னர் அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்..
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது குடியிருப்பு வாசிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குடிநீர் சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.. இந்த நிலையில் இதன் சம்மந்தமாக சூளகிரி பிடிஓ முருகன் அவரிடம் கேட்டபோது வறட்சி காரணமாக நிலத்தின் நீர்மட்டம் குறைந்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது...
வாணியர் தெரு மற்றும் கோட்டை தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவசர கால நடவடிக்கை தற்போது டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் வழங்கப்படும் விரைவில் தங்கள் குடியிருப்பு பகுதியில் குடிநீர் கிடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.. மேலும் குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்திட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன விரைவில் தங்கள் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர்... குடியிருப்பு பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்... இந்த நிலையில் குடிநீர் பிரச்சினை காரணமாக பெண்கள் காலி குடங்களுடன் பிடிஓ அலுவலகத்தில் முற்றுகையிட்டு சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது