சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்து வரும் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

Update: 2023-11-30 10:32 GMT

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மாலை வேளையில் இதமான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், குளிர்ந்த காற்றுடன் இதமான சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News