சிதறிக் கிடந்த சோடா பாட்டில்கள் - விரைந்து அகற்றிய நகராட்சி நிர்வாகம்
லால்குடி மேம்பாலத்தில் உடைந்து சிதறிக் கிடந்த சோடா பாட்டில்கள் மற்றும் கண்ணாடி சில்லுகளை நகராட்சி துப்புரவு பணியாளர் அகற்றினர்.;
Update: 2024-05-26 05:10 GMT
கண்ணாடி சில்லுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்
திருச்சி மாவட்டம் லால்குடி உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சோடா பாட்டில்கள் உடைந்து சிதறி கிடந்தது.இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர்கள் லால்குடி நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற நகராட்சி ஆணையர் குமார் உடனடியாக நகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு மேம்பாலத்தில் சிதறி கிடந்த சோடா பாட்டில்களின் துகள்களை அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்படி தூய்மை பணியாளர்கள் மேம்பாலத்தில் கிடந்த சோடப் பட்டில்களின் துகளகளை விரைந்து அகற்றினர் .சோடாபாட்டில் துகள்களால் பாதயாத்திரையாக செல்லும் பயணிகளுக்கு ஆபத்து மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கு முன் தூய்மை பணியாளகள் விரைந்து அகற்றினார்.உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக அலுவலர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.