முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம்,தென் பள்ளிப்பட்டு பகுதியில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-18 14:57 GMT

முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரெட் கிராஸ் சங்கம் சார்பில் கொசுவலைகள், பழங்கள், பிரட் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News