காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்:அமைச்சர் சு.முத்துசாமி

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செப்டம்பர் மாத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-15 10:08 GMT

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா,கனிமார்க்கெட்,சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் வளர்ச்சி திட்டம் குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி , தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்களில் காலி மதுபான மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நீதிமன்ற வழிகாட்டு படி நடைமுறைபடுத்தப்படும் ,

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் ஒப்பந்தத்தில் சிறு முறைகேடுகள் கூட தவறுகள் நடக்காத வகையில் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பெருந்துறை சிப்காட் வளாகத்தில்9 தொழிற்சாலைகள்இணைந்து நடத்தும் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும் , அவற்றின் மீது விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் , இது குறித்து தனி கமிட்டியும் , அண்ணா பல்கலைகழக நிபுணர்கள் குழுவும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் ,

குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பொது சுத்திகரிப்பு நிலையத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News