கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

காட்பாடியில் உள்ள வி.ஐடி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

Update: 2023-12-27 13:08 GMT

காட்பாடியில் உள்ள வி.ஐடி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்க வேண்டும் வி.ஐடி பல்கலைக்கழக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடிக்கான கல்வி உதவிதொகையை வழங்கி பெங்களூர் எம்.எஸ். இராமையா பல்கலைக்கழக வேந்தர் ஜெயராம் பேச்சு .

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வி.ஐடி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் வி.ஐடி பல்கலைகழக அனைவருக்கும் உயர் கல்வி திட்டம் மூலம் ஏழை கிராம புற மாணவர்கள் உயர் கல்வி பெறும் வகையில் ரூ.1 கோடிக்கு 957 மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவானது நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் இராமையா பல்கலைக்கழக வேந்தர் ஜெயராம் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பேசுகையில் , நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

குறிப்பாக கர்நாடகாவில் அதிக அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். லட்சகணக்கான மாணவர்கள் உயர் கல்வி பொறியியல் கல்வியை முடித்தால் அவர்களில் ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகின்றனர். லட்சக்கணக்கானோர் நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இந்த பிரச்சணையை எவ்வாறு தீர்பது என அரசாங்கமும் குழம்பி போய்வுள்ளது இதற்கு ஒரே தீர்வு மத்திய மாநில அரசுகள் இளைஞர்கள் திறனை மேம்படுத்த பயிற்சிகளை அளித்து அவர்கள் திறனை வெளிகொண்டு வரவேண்டும். அப்போது அவர்கள் வேலைவாய்ப்பை அடைவார்கள் என பேசினார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News