ரூ.2.14 கோடியில் பள்ளி கட்டிடங்கள் - பேரூராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டத்தில் 2.14 கோடியில் பள்ளிகளில் ஆய்வு கூடம், வகுப்பறை மற்றும் கழிப்பறைகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2024-02-04 04:47 GMT

பேரூராட்சி கூட்டம் 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூட்டத்தில் சந்தைய தோப்பு மேல் நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்திற்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் அமைக்கவும், நெம்மேலி மற்றும் நெல்மேலி மேட்டுத்திடல் தெருவில் மயானம் ரூ. 7 லட்சத்தில் கட்டிடவும், கீழ்வேளூர் பெருமாள் கோயில் தெருவில் உள்ள கீழ்வேளூர் அரசு உயர்நிலை பள்ளியில் ரூ. 54 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டவும், ரூ. 25 லட்சத்தில கழிவறை கட்டுவதற்கும், கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.10 கோடியில் ஆய்வு கூடம் கட்டவும், ரூ. 25 லட்சத்தில் கழிவறை கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News