காவிரி ஆற்றில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலபிள்ளையார் புத்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2024-04-11 08:33 GMT

 நீரில் மூழ்கி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகன் 17 வயதான திருக்குமரன். இவர் கரூரில் உள்ள முனிசிபாலிட்டி பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொட்டியம் அருகே உள்ள சீலபிள்ளையார்புத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் கடந்த நான்கு மாதமாக கைலாய வாத்தியம் வாசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சிவன் கோயிலில் கைலாய வாத்தியம் வாசித்து விட்டு பின்னர் மாலை குளிப்பதற்காக காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். மாணவன் திருக்குமரனுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது .இந்நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருக்குமரன் எதிர்பாராதமாக நீரில் மூழ்கி.பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதைக் கண்ட பொதுமக்கள் நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News