பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே நான்காம் வகுப்பு மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.;

Update: 2023-12-16 07:43 GMT

திருப்பத்தூர் அருகே நான்காம் வகுப்பு மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சு மோட்டர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் மற்றும் கீதா ஆகியோருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன மஞ்சுநாதன் ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து உள்ளார் மேலும் கீதா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு நந்தினி, நந்தகுமார், குருதியின், பூவரசன், நான்கு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் மூன்றாவது பிள்ளையான பூவரசன் வயது 9 இவர் வீட்டின் அருகே உள்ள கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குனிச்சி மோட்டூர் பகுதியில் கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News