புதுக்கோட்டையில் கார் மோதி மாணவிகள் படுகாயம்
புதுக்கோட்டையில் கார் மோதி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.;
விபத்தை ஏற்படுத்திய கார்
புதுக்கோட்டை சத்திய மூர்த்தி சாலையில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. நேற்று காலை பஸ்சில் வந்த மாண விகள் பலர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நடை பாதை வழியாக கல்லுாரிக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதியதுடன்,நடந்து சென்ற மாணவிகள் மீதும் மோதியது. இதை பார்த்து மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். கார் மோதியதில் முதலாமாண்டு மாணவிகளான ராயவரத்தை சேர்ந்த ஆனந்தி (17), புதுவயலை சேர்ந்த ஜனனி (17) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார் டிரைவர் ராஜ்குமார் என்பவ ரிடம் விசாரணை மேற்கொண்டனர்.