மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்

Update: 2023-11-28 05:19 GMT
மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாளைய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து உலக தமிழ் பன்னாட்டு கருத்தரங்கம் மயிலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். கல்லூரி செயலாளர் கேப்டன் ராஜீவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மலேசியா உலக தமிழ் பண்பாட்டு இயக்க தலைவர் சண்முகம் கலந்துகொண்டு உலக நாடுகளிகளில் தமிழ்மொழி வளர்ச்சியும், பாண்பாடும் பற்றி பேசி னார். இதில் மதுரை பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி, சென்னை உலக தமிழ் பண்பாட்டு பொதுச்செயலாளர் மதிவாணன், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி நிறுவனம் செல்வராசா, அமெரிக்க உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் வேலுப் பிள்ளை, கனடா உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் ராஜரத்தினம், தென்னாப்பிரிக்கா உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் டாக்டர் மேஸ்திரி, மலேசியா தலைமை ஆசிரியர் ஹரிஹரன் ஜெர்மனி உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் புவனேஸ்வரி மேஸ்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News