மயிலாடுதுறை அருகே அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் தின விழா

மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் நடைபெற்றது.

Update: 2024-02-28 17:05 GMT

 தேசிய அறிவியல் தினம்

மயிலாடுதுறை மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் நடைபெற்றது. கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜேந்திரன் தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கார்முகிலன் மற்றம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். தேசிய அறிவியல் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ச. சரவணன் மற்றும் ஏ.வி.வி.எம்.பூண்டி புஷ்பம் கல்லூரியின் கணிதவியல் துறைத் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு தேசிய அறிவியல் தினத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் இரா. விஜய்ஆறுமுகம் மற்றும் வேதியியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் து. சத்யா சிறப்பு விருந்தினர்களை பற்றிய சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் செ. விஜயலெட்சுமி நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் அனைத்து அறிவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News