அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

Update: 2024-03-04 09:55 GMT

அறிவியல் கண்காட்சி 

அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஊத்தங்கரை சீனிவாசா நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனி. திருமால் முருகன் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன் அவர்கள் கண்காட்சியை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் முன்னிலை வகிக்க துவங்கி வைத்தனர். அடுத்ததாக இக்கண்காட்சியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த கல்லூரி மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் புதுப்புது அறிவியல் சார்ந்த மாதிரிகளை காட்சிப்படுத்தி அவற்றிற்கு விளக்கம் அளித்தார்கள். அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான் பப்ளிக் (CBSE) பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு அறிந்து இன்புற்றனர். தொடர்ந்து மாணவிகள் செய்த அறிவியல் மாதிரிகளை இயற்பியல் துறையை சார்ந்த மு அனிதாலட்சுமி மற்றும் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர் டே ஜாஸ்மின் பிரிஸ்கில்லா இருவரும் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்பினை தேர்வு செய்தனர். இக்கண்காட்சியை கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கண்டு களித்தனர். சிறந்த அறிவியல் மாதிரிகளை செய்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தங்களது தேர்ந்தெடுக்கபப்ட்ட சிறந்த மாதிரிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாபெரும் அறிவியல் கண்காட்சி இனிதே நிறைவு பெற்றது.
Tags:    

Similar News