கோட்டூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி கோட்டூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-03-02 04:51 GMT

அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா 

கோட்டூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கொடமாண்டப்பட்டி அடுத்த கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்காட்டும் விதமாக தங்களது தனி திறன் படைப்புகளான 300க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் நிகழ்வில் பங்கேற்ற நடுவர்கள் மாணவர்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு மாணவர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். பின்னர் அறிவியல் படைப்புகளை செய்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.
Tags:    

Similar News