அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி;
By : King 24x7 Website
Update: 2024-02-29 11:47 GMT
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் க.வளர்மதி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் மரிய விமலா ஜான்சி ராணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த ஏடிஎம் இயந்திரம் இயங்கும் விதம், காற்றாலை மின் உற்பத்தி, இயற்கை உணவுகள், பெரிஸ்கோப் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி அறிவொளி கருப்பையா பேசினார். கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பார்வையிட்டனர்.