அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-31 02:35 GMT
அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட மாநாடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக மாவட்டத் தலைவர் ராசு தலைமையில் இன்று நடைபெற்றது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு சென்ற நான்கு குழந்தைகளுக்கு கேடயம் பரிசளிக்கப்பட்டது. வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 45 செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.