ஈரோட்டில் விஞ்ஞானி 2024 மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் விஞ்ஞானி 2024 மாணவர்களின் படைப்பாற்றல் கண்காட்சி நடந்தது.

Update: 2024-02-09 10:02 GMT

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் சிறந்த படைப்பாற்றல்களை ஊக்குவிக்கும் வகையிலும் 9, 10 , 11 ஆகிய மூன்று நாட்கள் கொண்ட 13வது மாணவர்களின் படைப்பாற்றல் விஞ்ஞானி நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர்  வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் மருத்துவம், அறிவியல், பொறியியல் சார்ந்த 1190-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.  மலை பாதைகள், கரடு முரடான இடங்களில் இலகுவாக செலுத்தக்கூடிய “நிலப்பரப்பு கிராலர் ரோபோ”இ குறைவான நேரத்தில் எளிதான முறையில் குழந்தைகளை மீட்கவல்ல “போர்வெல் மீட்பு இயக்கம்” , புற்றுநோயினை ஆரம்ப காலத்திலேயே மூலக்கூறு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்திக் கண்டறிவதற்கான “மேம்படுத்தப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம்”போன்ற 34க்கும் மேற்பட்ட தனித்துவம் வாய்ந்த  மாணவர்களின் படைப்புகளும் அடங்கும்..சிறந்த படைப்புகளை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Tags:    

Similar News