பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கு தேர்வு
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் ஸ்கூட்டர் வழங்க மாற்றுதிறனாளிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து 49 மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Update: 2024-01-12 01:16 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். இதற்கான தேர்வு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 63 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவ அலுவலர் விக்னேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட தேர்வு குழுவினர் பங்கேற்று தேர்வு செய்தனர். அதில் 49 மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.