சாத்தூரில் லோடு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூரில் லோடு ஆட்டோ டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-01-22 15:28 GMT
சாத்தூரில் லோடு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு சாத்தூர் நகர் போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைகோ நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(42). இவர் சாத்தூர் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சசிகுமாரை லோடு ஆட்டோ தேவைப்படுவது போல் பேசி வீட்டிற்கு அருகே கூட்டி சென்றுள்ளனர்.

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த அறிவாளால் சசிக்குமரை மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதையடுத்து சசிகுமார் செய்வதறியாது கத்தி அலறல் சத்தம் போட்டுள்ளார்.

Advertisement

சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆட்கள் வந்தவுடன் மர்ம நபர்கள் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில் சசிகுமார் பலத்த காயமடைந்தார்.

பின்னர் சசிகுமாரை அவரது உறவினர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அறிவாள் வெட்டு சம்பம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோடு ஆட்டோ டிரைவரை வெட்டியதற்கான காரணம் குறித்தும் வெட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சசிக்குமாரை வெட்டிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் லோடு ஆட்டோ டிரைவரை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News