இளையான்குடியில் SDPI மாவட்ட செயற்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-03-11 12:08 GMT
செயற்குழு கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்கலாம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயற்குழு உறுப்பினரும், மண்டல செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எதிர் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு மாவட்ட கமிட்டி குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவிற்கு தலைவராக முகமது அசாருதீன் (இளையான்குடி) செயலாளர் அப்துல் கலாம் (காரைக்குடி) தேர்தல் பணிக்குழு மாவட்ட உறுப்பினர்கள்: 1. முகமது அசாருதீன்(சிவகங்கை) 2. செய்யது காசிம் (இளையான்குடி) 3. இப்ராஹிம் (காரைக்குடி) 4. அகமது அலி (திருப்பத்தூர்) 5. பாவா பகுருத்தீன் (திருப்புவனம்) 6. சாதிக் அலி (தேவகோட்டை) 7. இம்தியாஸ் (சிவகங்கை).

ஒன்பது நபர்கள் மாவட்ட தேர்தல் பணிக்குழு மாவட்ட கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தீர்மானம்-1 முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் இல்லை என்றால் SDPI கட்சியின் சார்பாக அனைத்து ஜனநாயக சக்தியையும், இஸ்லாமிய கூட்டமைப்புகளையும் ஒன்று திரட்டி திரையிடப்படும். திரையரங்குகளுக்கு முற்றுகையிடுவோம். தீர்மானம்-2 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ சீர்குலைக்க கூடாது.

கியான்வாபி, ஹல்த்வானி. மஸ்ஜிதுக்கள் மீதான தொடரும் அநீதியை தடுத்து நிறுத்த வேண்டும். தீர்மானம்-3 பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாகவும் அது தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. தீர்மானம்-4 One Buth One Branch என்ற செயல்பாட்டின் கீழ் கிராமங்கள் தோறும் கிளைகள் உருவாக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News