எஸ்டிபிஐ கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-15 13:27 GMT
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தத்தில் அதிகாரித்துவரும் போதைப் பொருட்கள் புழக்கம், பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டண வரி, வீட்டு வரி மற்றும் முத்திரைத்தாள் உயர்வு ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கூறியும், "விஷம் போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்திடாத திமுக அரசை கண்டித்து ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் T. ரத்தினம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கண்டன கோஷங்கள் எழுப்பினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி எஸ்டிபி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.