எஸ்டிபிஐ கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும், விசைத்தறி ஊழியர்களின் ஊதிய பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
\ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் முகமது கனி தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது முன்னிலை வகித்தார். நகர செயற்குழு உறுப்பினர் மீராக்கன் வரவேற்புரை ஆற்றினார். நகரச் செயலாளர் அஜிர் உசேன் துவக்க உரையாற்றினார். காவேரி நகர் கிளை தலைவர் ஜமீன், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் அபுதாஹிர், நகர செயற்குழு உறுப்பினர் இப்னு,வர்த்தக அணி மாவட்ட தலைவர் கனி, நகரத் தலைவர் அப்துல் நசீர் உள்ளிட்ட பலர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பீர் மைதீன் நன்றி கூறினார்.