சீல் வைக்கப்பட்ட மருத்துவமனை திறப்பு !
பாவூர்சத்திரத்தில் சீல் வைக்கப்பட்ட மருத்துவமனை திறப்பு - உயர் நீதி மன்ற நீதிபதி மருத்துவமனையை திறக்க உத்தரவிட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 12:01 GMT
மருத்துவமனை திறப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சிவகாமி புரத்தில் தனியார் மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையை பிரபல அரசு மருத்துவர் ஜீவா ஜெயராமன் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் மருந்து கடை உரிமையாளராக ஜீவா ஜெயராமனின் கணவர் ஜெயராமன் நிர்வகித்து வருகிறார். இந்த மருத்துவமனையில், ஜீவா ஜெயராமன் மிகவும் குறைந்த விலையில் மருத்துவ பணி செய்து பொதுமக்களுக்கு வருகின்ற நோய்களை தீர்த்து வைப்பதுடன் அவர்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப பணம் இல்லாவிட்டாலும் மருத்துவம் செய்து அவர்களது நோய்களை தீர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது இப்பகுதி பொதுமக்களால் சிறப்பான வரவேற்பையும் நன் மதிப்பையும் பெற்று செயல்பட்டு வருகிறது. இவர்களது மருத்துவப் பணியின் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் போலி மருத்துவம் செய்வதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி கோட்டாட்சியர் இந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தார். இதனை எதிர்த்து அரசு மருத்துவர் ஜீவா ஜெய ராமன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி மருத்துவமனையை திறக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து மருத்துவ மனைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது.