உதகை படகு இல்லத்தில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு சீல்
உதகை படகு இல்லத்தில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;
Update: 2023-12-16 05:09 GMT
உதகை படகு இல்லத்தில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்றது படகு இல்லம். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பொருட்களை விற்பனை செய்ய 30க்கும் மேற்பட்ட கடைகள் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் நீண்ட மாதங்களாக கடை வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.