செபஸ்தியார் ஆலய பெருவிழா தேர்பவனி

மாடத்தட்டு விளை செபஸ்தியார் ஆலய பெருவிழா தேர்பவனி விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-24 06:22 GMT
தேர் பவனி

குமரி மாவட்டம், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயப்பெருவிழா கடந்த 12-ம் தேதி பாண்டிச்சேரி உயர்  மறைமாவட்ட பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. 8-ம் நாள் விழாவில்  காலை வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு பொதுக்கூட்டம், தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 108 ஆட்டுக்கிடா விருந்துடன் பகிர்வின் சமபந்தியும், 9ம் நாள் விழாவில்  இரவு திருத்தேர்பவனி‌ வாணவேடிக்கை நடந்தது.     

10-ம் நாள் விழா  காலை திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி,  திருவிழா திருப்பலி, பகல் 2 மணிக்கு திருத்தேர்பவனி ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.         விழாவுக்கான ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை அருட்பணியாளர் ஜெயக்குமார், இணை பணியாளர் பிரவின்தாஸ், பங்கு அருட்பணிப்பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர்செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லாபாய், துணைச் செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News