இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

விருதுநகரில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-02-29 05:21 GMT

 கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை முதல் 9 நாட்களாக சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக 2000க்கும் மேற்பட்டோர்   சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி 311ஐ திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டதில் ஈடுபட்டு வருகின்ற இடைநிலை ஆசிரியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண் புத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் விதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தொடங்கி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு வரை மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கதிரேசன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட முயன்றனர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சூலக்கரை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர் .கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News