செகந்திராபாத்- இராமநாதபுரம் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்

செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு விரைவு ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-03 01:50 GMT

பைல் படம் 

செகந்திராபாத்திலிருந்து நல்கொண்டா, குண்டூர் தெனாலி, நெல்லூர், கூடூர், சென்னை - எழும்பூர்,  செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயங்கிய (வண்டி எண் 07695 /07696) செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 03-04-2024 முதல் 26-06-2024 வரை மூன்று மாதங்களுக்கு (13 சேவைகள்) இயக்கப்பட உள்ளதாக தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த வழித்தடத்தில் 28.04.2022 முதல் ஏற்கனவே இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் சில மாதகாலம் தற்காலிகமாக இயக்கப்படாமல் இருந்தது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் விவேகானந்தம் ஆகியோர் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் நிலையில், இந்த ரயில் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த ரயில் சேவை பகல் நேரத்தில் இயக்கப்படுவதால், சென்னைக்கு தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ரயிலை தொடர்ந்து சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும், பேராவூரணி போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி வர்த்தக கழகப் பிரமுகர் விநாயகா எஸ்.கந்தப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News