அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது!

சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்துள்ளனர்.

Update: 2024-02-29 15:23 GMT

மணல் திருடிய டிரைவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி சரல் மண், மற்றும் கிரசர் மணல் எடுத்து செல்லப்படுவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் வருவாய்த்துறையினர் ஆனந்தபுரம், பழங்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது பேய்க்குளம் பகுதியில் வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது அனுமதியின்றி கிரசர் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பிடித்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பழங்குளம் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்கு பதிந்து லாரி டிரைவர் நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சுரேஷ்குமாரை (24) கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News