திருப்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 83000 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சாலை பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பக்கிரிசாமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் வந்த அசோக்குமார் என்பவரிடம் ரூ.83 ஆயிரம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் அவரிடம்இல்லை.இதனைத்தொடர்ந்துஅதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி கமிஷனர் கணக்கு(பொ) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்தனர்.