லால்குடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் நேற்று இரவு உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவந்த ரூ. 4.50 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லால்குடி அருகே உள்ள காட்டூர் பகுதியில் கோத்தாரி சர்க்கரை ஆலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகு முகில் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சி நாகமங்கலம் பகுதியில் இருந்து லால்குடி அருகே உள்ள காட்டூர் பகுதிக்கு சென்ற லோகநாதன் மகள் கிருத்திகா காரை மறித்து சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி ரூ 4 லட்சத்து 50 ஆயிரத்து 810 ரூபாய் பணம் கொண்டு சென்றதை கைப்பற்றினார்கள்.
மேலும் கைப்பற்றிய பணத்தை லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகு முகில் ஒப்படைத்தனர்.