உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.36 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-03 08:48 GMT

பணம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார்-தேசூர் சாலை அருகே பறக்கும் படை அலுவலர் குமரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி காரில் ரூ. 1.36 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் ரூ.1.36 லட்சத்தை பறிமுதல் செய்து வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News