மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் !!
சங்கராபுரம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல் - லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 10:39 GMT
லாரிகள் பறிமுதல்
சங்கராபுரம் அருகே அனுமதியின்றி மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கள்ளிப்பட்டு வி.ஏ.ஓ., பாரதி ஆகியோர் கல்வராயன் மலை துரூர் அருகே ரோந்து சென்றனர். அப்போது 2 டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் கடத்தல் காரர்கள் லாரியை விட்டு விட்டு தப்பினர். இதையடுத்து இரு டிப்பர் லாரிகளையும் வருவாய் துறையிணர் பறிமுதல் செய்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் பாரதி புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.