காஞ்சிபுரத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட பணம் பறிமுதல்

காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் நிலை கண்காணிப்புக்குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்கள் என்று எடுத்து வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2024-04-02 16:57 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் நிலை கண்காணிப்புக்குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்கள் என்று எடுத்து வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் கலைவாணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலினை ஓட்டி மாவட்ட முழுவதும் வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. 12 பறக்கும் படைகள் 12 நிலை கண்காணிப்பு குழு, 12 காணொளி கண்காணிப்பு குழு எனத் தொடர்ந்து 24 மணி நேரமும் தங்கள் பணியை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் , காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது

, உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் இருந்ததை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணியிடம் இக்குழுவினர் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் கேட்டபோது தற்போது கையில் இல்லை எனவும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் திரும்பப் பெற்றுக் கொள்வதாக பறிமுதல் செய்யப்பட்ட நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பறக்கும் படையினர் 24 மணி நேரம் சோதனை செய்ததில் இதுவரை குறைந்த அளவே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகை கடை நகைகள் பல கோடி சிக்கியதில் உரிய ஆவணங்கள் செலுத்தியதால் மீண்டும் அவர்களிடம் அந்த நகை ஒப்படைக்கப்பட்டது. இதைத் தவிர வேறு வகையில் குறிப்பிட்டு சொல்லும் படி அளவில் எந்த பணமும் பறக்கும் படையினர் மற்றும் நிலை குழு கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News