சுய உதவிக் குழுவினர் வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி
பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்கு செலுத்த கோரி மகளிர் சுய உதவி குழுவினர் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
Update: 2024-03-22 09:40 GMT
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் 100% பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு கட்ட விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் 100 சதவீதம் வாக்கு செலுத்த கோரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தேவதானம், மேல அக்ரஹாரம் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் விழிப்புணர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், மகளிர் சுய உதவி குழுவினர் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கணேஸ் என்கின்ற விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.