கூடுதல் விலைக்கு மது விற்பனை - தட்டிக்கேட்டவருக்கு அடி உதை

மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு வழக்கம் போல் பத்து ரூபாய் வாங்கப்பட்டு வரும் நிலையில், அதை எதிர்த்து கேள்வி கேட்டவரை ஆள் வைத்து தாக்கிய டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியதாக எதிர்த்து கேள்வி கேட்டவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-05-01 04:58 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை பகுதிகளில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகளில்  ஒரு குவாட்டர் பாட்டிலில் ரூபாய் 130 என்ற விலை போடப்பட்டிருக்கும். எப் பொழுதும் ரூபாய் 140 வாங்கினர்.  தமிழக அரசு விலை ரூ.10 ஏற்றியதால் தற்பொழுது பாட்டில் ரூ.150 என வசூல் செய்கின்றனர்.  காலி பாட்டில் திருப்பிக் கொடுத்தால் ரூபாய் 10 திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கூறி  ஒரு குவாட்டர் பாட்டில் ரூபாய் 160 கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை உள்ளது.    ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது குறித்து அவ்வப்பொழுது குடிமகன்கள் பிரச்சினை கிளப்பி வந்த நிலையில், சம்பவ தினத்தன்று மாப்படுகை டாஸ்மாக் கடையில் சித்தர்காடு இளவரசன், மூவலூர் வாசு ஆகியோர் பாட்டில் வாங்கும் பொழுது பத்து ரூபாய் அதிகமாக கொடுக்க முடியாது என்று  டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமாரிடம் வம்பு வளர்த்தனர்,

வாக்குவாதம் நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுது  விற்பனையாளருக்கு ஆதரவாக கனகராஜ், மணி, மாதவன் ஆகியோர் இளவரசனையும் வாசுவையும் தாக்கினர் இதில் இளவசனுக்கு படுகாயம் ஏற்பட்டது அதேபோல் எதிர் தரப்பான கனகராஜுக்கும் படுகாயம் ஏற்பட்டது இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை தாக்கியதாக இளவரசன் மற்றும் வாசு மீதும் பாட்டில் விலை அதிகமாக  கேட்டு கொடுக்காதல் தகராறு செய்த  இளவரசனை தாக்கியதாக டாஸ்மாக் விற்பனையாளர் சிவக்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை அதிகமாக கேட்டு கொடுக்காததால் தகராறு செய்து ஆள் வைத்து அடித்து உதைத்த டாஸ்மாக் விற்பனையாளர் அளித்த புகாரில் அரசு ஊழியரை தாக்கியதாக வழக்கும், டாஸ்மாக் கடை விற்பனையாளரின் அடியாட்களால் தாக்கப்பட்ட குடிமகன்  கொடுத்த புகாரில் டாஸ்மாக் விற்பனையாளர்மீது சாதாரண வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News