கூடுதல் விலைக்கு மதுவிற்பனை - வீடியோ வைரல்

நாமக்கல் மாவட்டம் வையப்பமலை டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2023-10-24 03:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நிரந்தர பணி நீக்கம் என ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுக்கடையிலும் கூடுதல் விலைக்கே மது விற்பனை செய்யப்படுவது அதிகாரிகளுக்குத் தெரியாதா என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் எண் 6220 என்ற டாஸ்மாக் கடையில் குவாட்டர் பத்து ரூபாயும் பீர்க்கு 15 ரூபாயும் கூடுதலாக விற்கப்பட்டதும் அதை மதுபிரியவர்கள் தட்டி கேட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் வையப்பமலை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடைக்கு மது பிரியர்கள் சரக்கு வாங்கிய போது ஏன் கூடுதல் விலைக்கு விற்கிறீர்கள் என கேட்க இங்க எப்பவுமே இப்படித்தான் என அலட்சியமாக டாஸ்மார்க் ஊழியர் பதில் அளிக்கும் இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பணத்தை உயர் அதிகாரிகள் முதல் முக்கிய கட்சி பிரமுகர்கள் வரை கொடுத்தது போக மீதி மாதம் 2000மோ, 3000 முதல் மிஞ்சும் என ஒரு சோகக் கதையையும் சொல்லியது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. தொடர் புகார்கள் காரணமாக கடந்த 15.09.2023 தமிழ்நாடு மாநில வாணிபக் அனைத்து மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் நிரந்தர பணியிடை நீக்கம் செய்யப்படும் என சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில் பல்வேறு புகார்கள் குவிந்தாலும் டாஸ்மாக் சங்கங்கள் மூலமாகவும் சங்கங்களில் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்களின் தயவுடனும் பலர் தப்பி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரக் கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.


Tags:    

Similar News