கெங்கராம்பாளையம் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி.பொறியியல் கல்லூரியில் மின்சார வாகனங்களுக்கான சோடியம் அயன் பேட்டரிகளின் சமீபத்திய சவால்கள் மற்றும் எதிர்கால முன்னோக்குகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி.பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதி உதவியுடன், மின்சார வாகனங்களுக்கான சோடியம் அயன் பேட்டரிகளின் சமீபத்திய சவால்கள் மற்றும் எதிர்கால முன்னோக்குகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் கே.வி.ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் ஆர்.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜி.மகேந்திரன் வரவேற்றார். காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர்.- சி.இ.ஆர்.ஐ.மின் வேதியல் பவர் சோர்ஸ் பிரிவு முதன்மை விஞ் ஞானி டாக்டர் எம்.கணேசன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய தொழில்நுட்ப கழக வேதியியல் துறை பேராசிரியர் கோதண்டராமன், உதவி பேராசிரியர் பழனி செல்வம், பெங்களூரு எரிசக்தி பொது மேலாளரான பொறியாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் உதவி பேராசிரியர் எம்.ராஜராஜன், மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் டி.ராமபிரதேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் கல்லாரி துணை முதல்வர் மெடில்டா நன்றி கூறினார்.