தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.;

Update: 2023-11-21 14:08 GMT
கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி தமிழக அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன், தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் சுகுமார் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனொரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  அந்த வகையில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற, நவ.23 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நாச்சியார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12 மணியளவில் கும்பகோணம்,

இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பிற்பகல் 3 மணியளவில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். அதேபோன்று மறுநாள் நவ.24 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9-30 மணியளவில் தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நண்பகல் 12 மணியளவில்  பட்டுக்கோட்டை, கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கலை மற்றும் அறிவியல்

கல்லூரியிலும், பிற்பகல் 3 மணியளவில் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News