ராணுவத்தின் சவால்கள் குறித்த கருத்தரங்கு
களியக்காவிளையை மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்சிசி சார்பில் இந்திய ராணுவத்திற்கு சவால்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
Update: 2024-03-03 11:48 GMT
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் என்சிசி சார்பில் இந்திய ராணுவத்திற்கு தற்போதைய சவால்கள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் தலைமை உரையாற்றினார், கல்லூரி முதல்வர் பீட்டர் அமலதாஸ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக காஷ்மீர் தீவிரவாத எதிர்ப்பு சிறப்பு ராணுவ அதிகாரி மேஜர் சபரி கலந்துகொண்டு காஷ்மீர் நிலவரங்கள் குறித்து விளக்கிப் பேசினார், தற்போது காஷ்மீர் அமைதியாக இருப்பதாகவும், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுஉருவதை வெற்றிகரமாக தடுத்து வருவதையும் விளக்கிப் பேசினார். கல்லூரி என் சி சி மாணவர்கள் சார்பில் சார் பீம் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் என்சிசிமாணவர்கள் சார்பில் சார் பீம் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.