மதுரையில் தொழில் முறை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம்

மதுரையில் வரிவிதிப்பில் தொழில் முறை வாய்ப்புகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Update: 2024-03-28 14:04 GMT

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்

கருத்தரங்கம் மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டு சுயநிதிப் பிரிவு துறை சார்பாக வரிவிதிப்பில் தொழில் முறை வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக மாணவி தமிழ்ப்பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் செ.ராஜு தலைமை வகித்தார்.

கல்லூரி செயலாளர் R.V.N கண்ணன் மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்வில் க.ப.நவநீதகிருஷ்ணன் முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர் சிறப்புரையாற்றினார் மேலும் சுயநிதிப் பிரிவு துறை தலைவர் முனைவர் M.குணசேகரன் சிறப்பு விருந்தினரை அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர் CA.T.தவமணி மற்றும் CA.P.சீனிவாசன் வரிவிதிப்பில் தொழில் முறை வாய்ப்புகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.நிறைவாக மாணவி சந்தியா மற்றும் தர்ஷினி நன்றியுரையாற்றினார் இந்நிகழ்வை வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் ,இந்துமதி , நவநீதகிருஷ்ணன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, ராமர்,கலை கதிரவன், கார்த்திகா லட்சுமி,கோகிலா, சுந்தரேசன், விஜயகுமார்,குணா, மற்றும் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்

Tags:    

Similar News