அண்ணா ஒரு சகாப்தம் தலைப்பில் கருத்தரங்கு
பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் பேரறிஞர் அண்ணா ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஊட்டி நீலக்குறிஞ்சி ஒளிப்பட அருங்காட்சிய அரங்கில் நடைப்பெற்றது.;
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கலையாசிரியர் முனீஸ்வரி வரவேற்றார். கருத்தரங்கிற்கு முன்னாள் வன அதிகாரி வித்யாதரன் தலைமை தாங்கி பேசினார். கவிஞர் ஜனார்தனன் முன்னிலை வகித்தார்.
திராவிட இயக்கத்தின் எழுச்சி, அண்ணாவின் பேச்சாற்றல், புத்தகங்களும் பேரறிஞர் அண்ணாவும், தமிழ்நாடு என்ற பெயர் தந்த அண்ணா என்ற தலைப்பில் கவிஞர் நீலமலை சுந்தரபாண்டியன், வாசமல்லி ஆகியோர் பேசினர். அண்ணாவின் நினைவலைகள் என்ற புகைப்படத்தை புலவர் சோலூர் கணேசன் காட்சிப்படுத்தினார்.
முடிவில் பொன் அருணசிவன்யா நன்றி கூறினார். புலவர் நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகவும் அண்ணாவைப் பற்றி பல அறிய தகவல்கள் தெரிந்து கொண்டதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.